search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டெர்லைட் நிர்வாக பிரிவு"

    ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாக பிரிவை திறப்பதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என தமிழக அரசு வைத்த வேண்டுகோளை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. #Sterlite #SterliteClosureOrderCase #NGT
    புதுடெல்லி:

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை பிறப்பித்தது.  இதை எதிர்த்து ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள கடந்த 9-ந்தேதி அனுமதி அளித்தது.



    ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணியை மேற்கொள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய அனுமதியை எதிர்த்தும்,  தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  

    இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பு கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழக அரசின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாக பணிகளை மேற்கொள்ள தடை விதிக்க முடியாது என தெரிவித்தது.

    தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை விதிக்கவும் மறுத்துவிட்டது. #Sterlite #SterliteClosureOrderCase #NGT
    ×